Latest News

October 05, 2013

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து!- யாழ். பல்கலை மாணவன் அச்சுவேலியில் பலி
by admin - 0

யாழ், அச்சுவேலி பிரதேசத்தில்
இடம்பெற்ற வாகன விபத்தில்
மோட்டார் சைக்கிளில்
பயணித்த யாழ். பல்கலைக்கழக
மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பிரதேசத்தில்
இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30
மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும்
டிப்பர் ஒன்றும் மோதுண்டதில் இவ்
விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற
மாணவனை பின்னால் வந்த டிப்பர்
மோதியுள்ளது. விபத்தில் சாவகச்சேரி, கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் கஜந்தன்என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவனாவார். இம்மாணவன் பல்கலைக்கழகத்தில்
கல்வி கற்று வரும் அதேவேளை தனியார்
கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்தும் வருகிறார். இந்நிலையில்
கல்வி நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போ
விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்த மாணவனது சடலம் யாழ்.
போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments