Latest News

October 05, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காற்றில் பறக்கும் வாக்குறுதிகளும்
by admin - 0

வாக்குகளுக்காக வீராவேசம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்ச முன்னிலையில், வடமாகாண சபை முதல்வரும் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்கள், உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்யமாட்டார்கள் என சூளுரைத்திருந்தது. சட்டத்தின்படி அவ்வாறு செய்ய வேண்டுமென்றில்லை.
 
கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரது பரிவாரங்களும் அவ்வாறே பதவியேற்றன. அதனை சுட்டிக்காட்டி, நீங்களும் அவ்வாறா பதவியேற்பீர்கள் என சி.வி விக்னேஸ்வனை கேட்டபோது, நிச்சயமாக நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். அவர்கள் அரசாங்கக் கட்சி ஆதலால் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். ஆனால், நாம் அவ்வாறு செய்யப் போவதில்லையென தெரிவித்திருந்த நிலையிலேயே, நேற்றுக் காலை இன அழிப்பாளர் ராஜபக்சவுடன் தமிழ் தேசியப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் சிங்கக்கொடி சம்பந்தர் நடாத்திய சந்திப்புக்கு பின்னர், மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை உறுதிப்படுத்தினார்
 
தேர்தல் கால பரப்புரைகளில், ராஜபக்சவை கொலைகாரனென்றும், கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச அயோக்கியன் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின், தற்போது எவ்வாறு, கொலைகாரன், அயோக்கியன் முன்னிலையில் கூட்டமைப்பின் பதவியேற்கப்போகிறனர் என்ற கேள்வி தவிர்க்கமுடியாதென்று யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments