பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மாவீரர் துயிலும் இல்லத்தை இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யவிருப்பதாக கிடைத்த
தகவல்களையடுத்தே சுமார் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாக எமது செய்தியாளர்கள்
தெரிவித்தனர். கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்வதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச
சபையில் நேற்று வியாழக்கிழமை (17) நிறைவேற்றப்பட்டது. இதன்பிரகாரம் கரைச்சி பிரதேச சபை ஊழியர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஈடுபடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்தே பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பரவு பணியில் யாரும் ஈடுபடவேண்டாமெனவும் அவ்வாறு ஈடுபட்டால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்
அவர்களை கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment