Latest News

October 18, 2013

சாமியாரின் தங்கக்கனவு: தோண்டும் பணியைத் தொடங்கியது அரசு
by admin - 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில்,பாழடைந்த
அரண்மனைக்குக் கீழே பல ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள தங்கப் புதையல் இருப்பதாக , கனவு கண்டதாக சாமியார் ஒருவர் சொன்னதை அடுத்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கும் பணியை இந்திய தொல்லியல் கழகம் தொடங்கியிருக்கிறது. ஷோபன் சர்க்கார் என்ற இந்த சாமியார் தான் கண்ட கனவில் 19வது நூற்றாண்டு அரசரான, ராவ் ராம் பக்ஸ் சிங்குக்குச் சொந்தமானது என்றும், இந்த புதையல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தௌண்டியா கேரா என்ற கிராமத்தில் இருப்பதாகவும் கூறினார். இந்தக் கனவை அந்த சாமியார் ஒரு அமைச்சரிடம் சொல்ல அவர் அதிகாரிகளை விட்டு இந்த இடத்தை ஆய்வு செய்து, தோண்டும் வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டார். கனவை நம்பி புதையலைத் தேடும் அரசாங்கத்தின் இந்த
நடவடிக்கை இந்தியாவில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது ஆனாலும் இந்தத் தோண்டும் பணியை பார்க்க பலர் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர
« PREV
NEXT »

No comments