Latest News

October 21, 2013

தங்கம் தோண்டுவதைக் கண்காணிக்க முடியாது--உச்சநீதிமன்றம்
by admin - 0

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தாண்டியாகேரா கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள தங்கப் புதையலைத்தேடும் பணியை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
அக்டோபர் 18-ஆம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் தங்கம் புதையல் தேடுதல் பணியை நீதிமன்றம் கண்காணிக்க கோரி தொடுக்கப்பட்ட பொதுநலன் வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க இயலாது என்று கூறியுள்ளது.
மேலும் இது குறித்து நான்கு வாரங்கள் கழித்தே முடிவு எடுக்கப்படும் என்றும் அது கூறியிருக்கிறது.
வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கிடைக்கப்போகும் பொக்கிஷத்தை பாதுகாக்க தீவிர கண்காணிப்பு அவசியம் என்று கோரியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் இது குறித்து தெரிவிக்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் எல்லா விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிடாது என்றார், அதோடு ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்றும், அதற்காக யூகங்கள் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தங்கம் தேடுதல் பணியை தொடங்கியுள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சி குறித்து பல தரப்பிலும் பல விமர்சனங்களும் உருவாகியுள்ளன.
அதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பி.கே.மிஸ்ரா, சாமியார் ஷோபன் சர்க்காரின் கனவை அடிப்படையாகக் கொண்டு இந்த பணியை தொடங்கவில்லை என்றார்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் அனைத்தும் வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றும் தெரிவித்தார். ஆகையால் இப்பணியும் கிடைக்கப் பெற்ற ஆய்வறிக்கையின்படியே நடைபெறுவதாகவும் கூறினார்.
« PREV
NEXT »

No comments