Latest News

October 21, 2013

முள்ளிவாய்க்கா​ல் நினைவு முற்றம் திறப்பு- செந்தமிழன் சீமான் அறிக்கை !
by admin - 0

மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் வருகிற 8,9,10 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாகவும், குருதி தோய்ந்த ஈழத்தின் விடுதலைப் போரை ரத்தமும், சதையுமாக நினைவு கூர்கிற வகையிலும் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருந்தமிழர்.அய்யா.பழ.நெடுமாறன் தலைமையில் திறக்கப்பட இருக்கிறது. முதுபெரும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், பலதுறை அறிஞர்கள் என அனைவரும் ஒன்று சேர கூட இருக்கிற இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் அணி திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

ஈழ விடுதலைக்காக களமாடி விதையாய் புதைந்திருக்கிற மாவீரர்களின் ஓவியங்கள், தமிழ் காக்க உயிரை துச்சமென மதித்து களமாடிய மொழிப்போர் ஈகிகளின் உருவங்கள், தமிழ்மொழி வாழ.. உயிர் உருக்கி உழைத்த தமிழறிஞர்களின் புகைப்படங்கள், 2009 ல் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் துயரமும், குருதியும் படிந்த சிற்பங்கள் என தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாக விளங்க இருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருமதிப்பிற்குரிய தமிழர்கள் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா.பழ.நெடுமாறன், புதியபார்வை இதழின் ஆசிரியர்.முனைவர்.ம.நடராசன் ஆகியோரின் கடும் முயற்சியினால்..அளவற்ற உழைப்பினால் உருவாகி இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது. தமிழர்கள் அனைவரும் கூடுவோம் தஞ்சையில்..




என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இதையே என் அழைப்பாகவும், வேண்டுகோளாகவும் கருதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விற்கு வருகைதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




நாம் தமிழர்.
« PREV
NEXT »

No comments