Latest News

October 21, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
by admin - 0

திண்டிவனம்: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்ல்வெத் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்
குழு நேற்று நடைபெற்றது. இப்பொதுக்
குழுவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.
வீரமணி தலைமை வகித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈழத்தமிழர் பிரச்சனையில் எந்தவித முன்னேற்றமும்
இல்லாத நிலைதான் நாளும் தொடர்கிறது. மனித உரிமை ஆணையத்தின் தலைமை இயக்குநர் இலங்கைத் தீவுக்கு நேரில்
சென்று உண்மை நிலைகளை நேரில்
கண்டறிந்து வெளியிட்ட அறிக்கை, - ராஜபக்சே அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஈழத் தமிழர்களின்
அடிப்படை வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப் போவதில்லை என்பதைத்
திட்டவட்டமாகவே உணர்த்துகிறது. ஏற்கெனவே ஈழப் போரில் தன் கடமையை ஐ.நா. செய்யவில்லை என்று அய்.நா.வின் செயலாளர் பான்
கீ மூன் அவர்களே வெளிப்படையாக
ஒப்புக்கொண்டுள்ளார். அந்தத் தவறுக்குப்
பரிகாரம் தேடும் வகையில், மனித
உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கெனவே 2011 ஏப்ரலில் தரூஸ்மன் தலைமையில்
ஐ.நா. நியமித்த மூவர் குழு தெரிவித்த
கருத்தின் அடிப்படையிலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்
குற்றவாளி என்று அறிவிக்கத் தேவையான
நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அய்.நா. மன்றத்தை வலியுறுத்துகிறோம் இலங்கையை நீக்க வேண்டும் இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவ
கெடுபிடிகளுக்குமிடையே தேர்தல்
நடத்தப்பட்டும் தமிழ்த் தேசியக்
கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் மாநில அரசுக்கு காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளையும் வழங்கப் போவதில்லை; - 13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்து இருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்பதோடு,
இதனை அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும். நிறவெறி குற்றச்சாட்டின் பேரில் தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த்
அமைப்பிலிருந்து இதற்கு முன்
நீக்கப்பட்டுள்ளது (1961 முதல் 1994
வரை நீக்கியது) 1995இல்
நைஜீரியா நான்கு ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டதுண்டு. 1999 இல் பாகிஸ்தான் இடை நீக்கம் செய்யப்பட்டது. 1987 முதல் 1997 வரை பிஜி தீவும் நீக்கி வைக்கப்பட்டது. 2002இல் ஜிம்பாப்வேயும் காமன் வெல்த்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
இந்த நாடுகளில் நடைபெற்ற போர்க் குற்றங்களைவிட இன ஒழிப்பு உள்ளிட்ட பல மடங்கு கொடுமைகள் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் காமன்வெல்த்
அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டியதே காமன்வெல்த் அமைப்பின் நேர்மையை நிலைநிறுத்தும்.
அல்லது குறைந்தபட்சம் உடனடியாக இலங்கையில் காமன்வெல்த்
நடைபெறுவதை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் காமல்வெல்த் அமைப்பினைக் கேட்டுக் கொள்கிறோம். இந்தியா பங்கேற்க கூடாது இந்த இரண்டு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள இயலாவிட்டால் இலங்கையில் நடக்க
உள்ள காமல்வெல்த் மாநாட்டில்
இந்தியா கண்டிப்பாகவே கலந்துகொள்ளக்கூடாது என்று இந்திய
அரசை வலியுறுத்துகிறோம்.. ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழித்து இலங்கையில் தமிழினம் என்ற
ஒன்று கிடையவே கிடையாது என்று ஆக்குவதற்கான மூர்க்கத்தனமான செயல்பாட்டில் இறங்கி இருக்கும் ராஜபக்சே அரசுக்கு போர்க் கப்பல்களை வழங்குவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். இந்தத்
திட்டத்தை அறவே கைவிடுமாறு இந்திய
அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments