Latest News

October 02, 2013

வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டியது அவசியம் - சம்­பந்தன்
by Unknown - 0


வட புலத்தில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் எடுக்க வேண்­டு­மெனும் தனது நிலைப்­பாட்டை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி வட­மா­காண சபைக்­கென முதன் முத­லாக நடத்­தப்­பட்­டி­ருந்த தேர்­தலில் அமோக வெற்­றியைத் தன­தாக்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இது குறித்து தெரி­வித்­துள்­ள­தா­வது,

வட புலத்தில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்­ன­மா­னது சிவில் செயற்­பா­டு­க­ளுக்கு உத­வாத நிலை­யிலும் வர­வேற்­கப்­ப­டாத நிலை­யி­லுமே உள்­ளது. எனவே இரா­ணுவப் பிர­சன்னம் குறைக்­கப்­ப­டு­வ­துடன் அவர்கள் முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­பட வேண்டும் என்றார்.

நடை­பெற்று முடிந்த மேற்­படி மாகா­ண­சபைத் தேர்­தல்­களின் போது இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த இடை­யூறு விளை­விக்கும் வகி­பா­கத்தைச் சுட்­டி­யு­ரைத்த சம்­பந்தன், வாக்­காளர் பெரு­மக்­களை சாது­ரி­ய­மான முறையில் அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்கும் அடா­வ­டித்­த­னங்­களில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டி­ருந்­த­மைக்கு மேலாக தேர்­தல்கள் நடை­பெ­று­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் சர்­வ­தேச தேர்தல் கண்­கா­ணிப்புக் குழு­வி­னரின் கடும் தொனியில் அமைந்­தி­ருந்த கருத்­து­ரை­களைக் கவர்ந்­தி­ருந்த தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் ஒரு­வரின் வீடு தாக்­கப்­பட்­டமை குறித்த சம்­ப­வத்­துடன் இரா­ணு­வத்­திற்கு தொடர்பு இருந்­த­தா­கவே பெரிதும் நம்­பப்­பட்­ட­தெ­னவும் குறிப்­பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஜனா­தி­பதி தனது கூடுதல் கவனஞ் செலுத்தி வட­மா­காண மக்­களின் ஜன­நா­யக ரீதி­யி­லான விருப்­பத்­திற்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மென தாங்கள் அவரை வலி­யு­றுத்திக் கேட்டுக் கொள்­வ­தாக கூறினார். முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யாகக் கட­மை­யாற்­றிய தற்­போ­தைய வட­மா­காண ஆளு­ந­ருக்குப் பதி­லாக சிவில் நிரு­வாக அதி­காரி ஒரு­வரை நிய­மிக்­கு­மாறும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மத்­திய அரசை வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ‘‘புளொட்’’ அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் இரா­ணுவ மயப்­ப­டுத்­தலின் தாற்­ப­ரியம் குறித்து கருத்து தெரி­விக்­கையில்,

இரா­ணு­வத்­தி­னரின் தொடர்ச்­சி­யான அடக்­கி­யாளும் நட­வ­டிக்­கைகள் மக்­களைப் பீதி­ய­டைய வைத்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இது குறித்து யாழ். மாவட்ட பாது­காப்புப் படை­களின் தள­பதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்­து­ரு­சிங்க தெரி­விக்­கையில்,

கடந்த 2009 டிசம்­பரில் தான் பத­வி­யேற்­ற­போது 26,400 ஆக காணப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்­கை­யா­னது தற்­போது கிட்­டத்­தட்ட 13,200 ஆக குறைந்­துள்­ள­தாகக் கூறினார்.

ஒரு மாதத்­திற்கு முன்னர் இலங்­கையில் தங்­கி­யி­ருந்த மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை மற்றும் சர்­வ­தேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த அவர் ஓரிரு சம்பவங்கள் அங்குமிங்குமாக நடந்திருக்கலாமெனவும் இராணுவத்தை தனியே விட்டு விடுமாறும் இந்த நாட்டில் தாங்கள் அரசியல் வகிபாகம் எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் மேலும் குறிப்பிட்டார்.

« PREV
NEXT »

No comments