Latest News

October 02, 2013

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது !!!
by Unknown - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தாக்கல் செய்த அறிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் முக்கியமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தில்கள், சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமான விடயங்களில் தலையிடுவது காரண காரியங்களுக்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கடந்த 25 ஆம் திகதி இலங்கை தொடர்பான தனது வாய்மொழி மூல அறிக்கையை மனித உரிமை பேரவையில் சமர்பித்தார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தமது நாட்டின் மனித உரிமை பிரச்சினைகளை சிறந்த மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படாது போனால் சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை எனவும் அவர் கூறியிருந்தார்.
« PREV
NEXT »

No comments