Latest News

October 01, 2013

தொடரும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்!
by Unknown - 0

யாழ்ப்பாணத்தினிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையான யாழ்.தினக்குரலினது அலுவல செய்தியாளர்கள் இருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் எனக்கூறிக்கொள்பவர்களினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகையினது ஆசிரிய பீடமே இம்முறைப்பாட்டை செய்துள்ளது. பல தடைவைகளாக குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த நபர்கள் இவ்விரு பத்திரிகையாளர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஆசிரிய பீடத்தை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

எனினும் அவர்கள் தம்மை அடையாளப்படுத்துவம் வகையிலான ஆவணங்களை தமக்கு சமர்ப்பிக்கவில்லையென்பதால் அத்தகைய தகவல்களை வெளியிட ஆசிரிய பீடம் மறுதலித்துள்ளது.இந்நிலையினில் குறித்த பத்திரிகையாளர்களது வதிவிடப்பகுதிகளினில குறித்த நபர்கள் தொடர்ச்சியாக நடமாடுவதாகவும் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையினிலேயே இப்புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களினில் பல பத்திரிகையாளாகள் கொல்லப்பட்டிருந்தமை மற்றும் காணாமல் போயிருந்தமை தொடர்பினில் அச்சமான சூழலே தொடர்கின்ற நிலையினில் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோத்தா பாயவின் நேரடி வழி நடத்தலில் இயங்கி வரும்  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பிரிவொன்று முன்னதாக நாவலர் வீதியினில் நமது ஈழநாடு பத்திரிகை அலுவலக கட்டிடத்தினில் தற்போது செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments