இலங்கையில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஆகியன இலங்கையில் போதியளவு மதச்சுதந்திரம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது என கனடா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன், முஸ்லிம் அரசியல்வாதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை ஆகியன இலங்கையில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் இம்முறை பொதுநலவாய மாநாடு நடைபெறுகின்றது எனவே பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் உயர்மட்டக்குழு பங்கேற்காது என கனேடிய அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment