Latest News

October 01, 2013

போர்க் குற்றம்: மேலும் ஒரு வங்கதேச அரசியல்வாதிக்கு மரண தண்டனை-கலக்கத்தில் மகிந்த
by admin - 0

வங்கதேச விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக வங்கதேசத்தில் மூத்த எதிர்கட்சித் தலைவரான சலாலுதீன் காதர் செளத்ரிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971ஆம் ஆண்டு போர் நடத்தியது. அப்போது இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை நிகழ்த்தியதாக ஏற்கெனவே ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவர் அப்துல் குவாதர் மொல்லா மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது அப்துல் குவாதர் மொல்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது. இந்நிலையில் அந்நாட்டு எம்.பி.யும் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவருமான சலாலுதீன் காதர் சௌத்ரி மீதும் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது போர்க் குற்றம் புரிந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றமே சலாலுதீன் காதர் சௌத்ரிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் சலாலுதீன் காதர் சௌத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments