உலகில் மிகவும் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 88 வது இடத்தில் உள்ளது.
ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் 2013 ஆம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
இலங்கை தவிர ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உலகில் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளன.
ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் தமது குடிமக்கள் சுதந்திரமான பயணம் செய்யக் கூடிய உலக நாடுகள் வரிசையை அடிப்படையாக கொண்டு இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளின் நடமாட்டத்தையும் தமது எல்லைகளை கடப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாக அரசாங்கங்கள் விசா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வருகின்றன என அந்த நிறுவனம் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டவர்கள் தாம் விரும்பும் பகுதிக்குள் நுழைய பெரும்பாலான நாடுகள் விசாக்களை நிலையான தேவையாக கருதுகின்றன. விசா தேவைகள் கூட தனிப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகள், தகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளன.
பின்லாந்து, சுவிடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் 173 புள்ளிகளை பெற்று வரிசையில் முதல் இடத்தில் உள்ளன. இந்த நாட்டு பிரிஜைகள் விசா இன்றி நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பயணம் செய்ய முடியும்.
இலங்கை 88 வது இடத்தில் உள்ளதுடன் லெபனான், கொசோவோ, சூடான் ஆகிய நாடுகள் இந்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. 38 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மட்டுமே விசா அனுமதியின்றி செல்ல வசதிகள் உள்ளன.
இந்த தரப்படுத்தலில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது ஆப்கானிஸ்தான். அந்த நாடு 98 வது இடத்தில் இருப்பதுடன் 28 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
No comments
Post a Comment