நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதால் சில சிங்கள கட்சிகள் தன்னை அச்சுறுத்தி வருவதாக அதிவேக படகில் சென்று இந்தியாவில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை அதிவேக படகு ஒன்றின் மூலம் ஈழத்தமிழரான எம்.செல்வராஜா ( 37 வயது) என்பவர் இராமேஸ்வரம்- தனுஸ்கோடி பகுதியைச் சென்றடைந்தார். இவரை தனுஸ்கோடி பொலிஸார் கைது செய்தனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே தான் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்ததாகவும் தான் 10,000 ரூபா செலுத்தியே படகில் வந்ததாகவும் கூறியுள்ளார்.
1984ம் ஆண்டு இந்தியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் திருச்சி முகாமில் வசித்து வந்துள்ளார். பின் 2011ம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் எம்.செல்வராஜா கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments
Post a Comment