Latest News

October 26, 2013

சனல் 4 தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்காத இலங்கை?
by admin - 0

கொழும்பில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின்
தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன. எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க
கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனு வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. ஊடகங்களுக்கு அனுமதிப்
பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர், இந்த
தாமதத்திற்கு காரணம் என்ன
என்று வினவியுள்ளார். தமது விண்ணப்பம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஒரே பிரித்தானிய ஊடக
வலையமைப்பு தமது வலைமைப்பே என்று சனல் 4 தொலைக்காட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments