Latest News

September 25, 2013

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா.வில் பொது மன்னிப்பு சபை அறிக்கை
by admin - 0

 
இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள்
தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையக்
கூட்டத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
எனப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மேலும், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள்
அதிகரித்து வருவதை அரசு அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் என்றும் அந்த
அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்கள் கடமையைச் செய்ததற்காக பத்திரிகையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள்,
மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர்
என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக அதிபர்

ராஜபக்சே அமைத்துள்ள விசாரணை ஆணையத்தால் பலன்
கிடைக்குமா என்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இலங்கையில் மிக மோசமான மனித உரிமை நிலவரம் இருந்து வரும் சூழலில், அங்கு காமன்வெல்த்
மாநாடு நடத்துவது எந்தளவு நியாயம் என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments