Latest News

September 25, 2013

பான் கீ மூனுடன் மஹிந்த சந்திப்பு
by admin - 0

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற்று உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன்
சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர்
பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில்
உரையாற்றுகின்ற 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு பேரவை அமர்வில்
உரை நிகழ்த்தினார். ஜனாதிபதியின் இம்முறை விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர்
முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் அலுவல்கள், திறன் விருத்தி அமைச்சர் டலஸ்
அழகப்பெரும, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற
உறுப்பினர் லொஹான் ரத்வத்தே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும்
கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது  ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர
பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர
சில்வா ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments