Latest News

September 24, 2013

தனியரசு என்பது விடுதலைப்புலிகளின் கோரிக்கை மட்டுமல்ல அது எங்களின் கோரிக்கையும் கூட
by admin - 0

எதிர்பார்ப்புக்களையும் கடந்து வடக்கு மாகாண சபைத்தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபை யின் ஆட்சியை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றும் என்பது தெரிந்த விடயமாயினும் தமிழ்மக்கள் என்றுமில் லாதவாறு திரண்டெழுந்து வாக்களித்து வரலாற்றுச் சாதனை படைப்பர் என் பது எவராலும் எதிர்பார்க் கப்படாத ஒரு பெரும் நிதர்சனம்.
வடக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்களிப்பு என்ற தகவலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வரலாறு காணாத வெற்றி என்ற உண்மையையும் தனித்து தேர்தல் வெற்றி என்ற விமர்சனங்களுக் குள் அடக்கி விடமுடியாது.
மாறாக என்றுமில்லாத வாறு தமிழ் மக்கள் உணர் வுபூர்வமாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன்மூலம் இலங்கை அரசுக்கும் சர் வதேச சமூகத்திற்கும் முக் கியமான செய்திகளை தமிழ்மக்கள் கூறியுள்ளனர்.
இதில் இலங்கை அர சுக்கு தமிழ்மக்கள் கூறுவ தானது, தமிழ்மக்கள் தங்க ளைத் தாங்களே ஆட்சி செய்ய விரும்புகின்றனர்.
காலாகாலமாக நீங்கள் எங்களுக்குச் செய்த வன் கொடுமைகளை நாங்கள் ஒரு போதும் மறந்துவிட வில்லை.
2009 ஆம் ஆண்டு வன் னிப் போரில் தமிழ்மக்க ளைக் கொன்றொழித்த நீங்கள் வீதிகளைப் புனர மைக்கலாம், வீடுகளைக் கட்டலாம், அபிவிருத்தி என்று உரைக்கலாம். ஆனால் உங்களோடு சேர்ந்து வாழ்வதென்பது கூச்சமானது.
நீங்கள்; எங்கள் இனத் தைக் கருவறுத்த கொடு மையை நாம் எக்காலத் திலும் மன்னிக்கவும் மறக் கவும் மாட்டோம் என்ற செய்தி தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.
அதேநேரம் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மிக உச்சமாக தமிழ்த் தேசி யக்கூட்டமைப்புக்கு வாக் களித்ததன் மூலம் நாங்கள் இறைமையுள்ள தமிழ்த் தேசியமாக வாழவிரும்புகிறோம்.
வன்னிப்போரில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி கொடுத்து விடுத லைப் புலிகளை நீங்கள் தோற் கடித்திருக்கலாம். ஆனால் நாங்கள் தனித்துவமாக வாழ விரும்புகிறோம். அதுவே எங்கள் அபி லாசை. தனியரசு என்பது விடுதலைப்புலிகளின் கோரிக்கை மட்டுமல்ல அது எங்களின் கோரிக்கை யும் கூட. இப்போது புலிகள் இல்லாது போனாலும் எங் கள் மனங்களில் அந்த நினைப் பும் தேவையும் தீர்க்கமாக நிலைத்துவிட்டன.
நீங்கள் எங்களுக் குச் செய்யவேண்டியது எங்களுக்கான ஆட்சியை எங்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது தான்.
இந்த உண்மைகளை அரசும் சர்வதேசமும் புரிந்து கொண்டால்- புரிதலுக்கு அமைவாகச் செயற் பட்டால் இலங்கைத் திரு நாட்டின் எதிர்காலம் அமை தியானதாக, ஆரோக்கிய மானதாக இருக்கும்.
விடுதலைக்காக 30 ஆண்டுகள் ஆயுதப்போரா ட்டத்தை நடத்திய, இதற்காக எத்தனையோ இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைத் தேர்த லில் திரண்டெழுந்து வாக் களித்தமை அதிசயமில் லையாயினும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவப் பிரசன்னம், சட்டவிரோத மீள் குடியேற்றம், திட்டமிட்ட கழுத்தறுப்பு என்ற பல்வகை நெருக்கீடுகள், ஆபத்துக் கள் மத்தியில் தமிழ்மக் கள் தங்கள் விடு தலைக் காக- உரிமைக்காக வாக்க ளித்தனர் என்றால் அது குறித்து சிங்கள மக் களும் ஆட்சியாளர்களும் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியாது.
எதுவாயினும் வடக்கு மாகாண சபைத் தேர்த லின் முடிபுகள் தமிழ் மக்களின் உரிமை களை வழங்க வேண்டும் என் பதை மீண்டும் ஒரு தடவை அரசுக்கும் சர்வதேசத் துக்கும் அழுத்தம் திருத் தமாக எடுத்தியம்பியுள் ளது.
விதுரன்
« PREV
NEXT »

No comments