சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. உறுதி செய்தது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதாக சிரியா மீது குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதில் தீவிரமாக உள்ளது.அதே சமயம் இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிடுவதாக அமெரிக்கா கூறி வருகிறது. எனவே, இரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் யோசனையை ரஷ்யாவும் தெரிவித்தது. அமெரிக்காவின் தாக்குதலை தவிர்ப்பதற்காக ரஷ்யாவின் இந்த யோசனையை சிரியா ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ரஷ்ய வெளியுறவு மந்திரியுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஒரு முன்முயற்சியை அவர் தெரிவித்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று சிரியா வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment