இனப்படுகொலை இலங்கையே! 3இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்த்தா?
என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதி கேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளார்கள்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாடு குறித்து தமிழகம் கடந்து இந்தியளவில் பல்வேறு வகையில் குரல்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் மிகப்பெரும் அழுத்தத்தை கொடுக்கும் வகையிலான போராட்டம் ஒன்றை மாணவர்கள் கையிலெடுத்துள்ளார்கள்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டின் போது அமெரிக்கத் தீர்மானம் அயோக்கியத் தீர்மானம் தனித் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஈழத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்ற முழக்கத்துடன் சென்னை லயோலா மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப்போராட்ட நெருப்பு தமிழகம் எங்கும் பற்றியெரிந்தது.
இந்தியளவில் தமிழக மாணவர்களது போராட்டம் வீச்சுப்பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத காங்கிரசு கட்சி குண்டர்கள் திருச்சியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொலைவெறியுடன் மலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.
ஈழத்தை சுடுகாடாக்கியது போதாது என்று காங்கிரசார் தமிழகத்திலும் தமது கொலைவெறியாட்டத்தை நிகழ்த்திய திருச்சி அரிஸ்டோ சுற்றுவட்டப்பாதையில் இருந்து இந்த நீதிகேட்கும் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கஉள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் மலேசியாவில் இருந்து வந்துள்ள மாணவர்களுமாக 50 தமிழ் மாணவர்கள் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொள்கின்றார்கள்.
இனப்படுகொலை நாட்டில் கொமன் வெல்த் மாநாட்டை எப்படி நடத்தமுடியும் என சட்டையைப்பிடித்து உலுக்கத் தயாராகியுள்ள இந்த மாணவர் சைக்கிள் பேரணி வரும் 13ம் திகதி திருச்சியில் இருந்து ஆரம்பித்து இம்மாதம் 23ம் திகதி சென்னையை சென்றடைகின்றது.
No comments
Post a Comment