Latest News

September 19, 2013

அரசியலில் குதிக்கிறார் ரஜினிகாந்த்
by admin - 0


வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா  இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிரச்சனையும் இருக்காது, அதே நேரத்தில் எதிரிகளின் அறிக்கை தாக்குதலுக்கு தனக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பதை எண்ணி, அரசியலில் பாரதிய ஜனதாவின் மூலம் குதிக்க அதிரடி முடிவு எடுத்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் பல்வேறு கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்கள், ரஜினிக்காகவே பாரதிய ஜனதாவில் சேருவதற்கு தயாராக இருப்பதாக பல கட்சியில் இருந்து பலர் ரகசியமாக ரஜினியிடம் டெலிபோனில் பேசி வருகிறார்களாம். இதில் முதலாவதாக இருப்பவர் ஜி.கே. வாசன். காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் பெரும் அதிருப்தியில் இருக்கும் இவர், ரஜினி அரசியலுக்கு வருவதை காரணம் காட்டி கட்சியில் இருந்து வெளியே வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே ஜி.கே. மூப்பனாரும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த இணைப்பு மிகவும் சுலபமாகி விடும் என அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் விஜயகாந்த் கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்கள் பலர் இப்போதே ரஜினியிடம் சேர துடிப்பதாக செய்திகள் வருகின்றன. விஜயகாந்த் கட்சியில் விஜயகாந்த் ரசிகர்கள் தவிர ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என எண்ணித்தான் எல்லோரும் விஜயகாந்த் கட்சியில் இணைந்தனர். அதில் ஒருசிலர் மாவட்ட அளவில் பொறுப்பும் வகிக்கின்றனர். அவர்கள் எல்லோரும் கூடாரத்தை காலி செய்துவிட்டு, ரஜினிக்காக பாரதிய ஜனதாவில் இணைய முடிவு செய்துள்ளனர். இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியில் உள்ளார். கிட்டத்தட்ட கட்சியே காலியாகிவிடும் நிலை என்பதால் அவரது அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். ஏற்கனவே ஜெயலலிதா சில எம்.எல்.ஏக்களை இழுத்துவிட்டதால் பெரும் திண்டாட்டத்தில் இருக்கும் கேப்டன், ரஜினி அரசியலுக்கு வந்தால் கட்சியை கலைத்துவிட்டு, மீண்டும் பேசாமல் நடிப்புத்துறைக்குத்தான் வரவேண்டும் என்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் இந்த அதிரடி நடவடிக்கையை கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரிதாக எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. 
« PREV
NEXT »

No comments