Latest News

September 19, 2013

கோத்தபாயவின் கட்டளைப்படி டக்கிளஸ் கொலைகள் செய்வார்
by admin - 0

நாமால் ராஜபக்ஷவின் பள்ளி நண்பரான ஸ்ரீரங்காவின் தொலைக்காட்சி நிகழ்சியை பார்த்து விட்டு கோட்டபாய கடுப்பாயியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகிந்தர் ஸ்ரீரங்காவை நாட்டை விட்டு செல்லவேண்டும் எனவும் இல்லை என்றால் டக்ளஸ் அவரை கொன்றுவிடுவார் என்றும் தனது மகனிடம் கூறியுள்ளார். இத்திடுக்கிடும் தகவலை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் ஸ்ரீரங்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ! சரி வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம் !

மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஸ்ரீரங்கா ஆகும். இவர்கள் இருவருமே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்னர் ஸ்ரீரங்கா கொழும்பில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்சிகளை நடத்திவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொலைக்காட்சியில் காணமல் போகும் நபர்கள் தொடர்பாக ஒரு நிகழ்சியை தயாரித்து வெளியிட்டுள்ளார். இன் நிகழ்சியில் அவர் மறைமுகமாக கோட்டபாயவை தாக்கியிருந்தார். இதனைப் பார்த்த கோட்டபாய கடும் ஆத்திரமடைந்து மகிந்தரை தொடர்புகொண்டுள்ளார். இதனையடுத்து மகிந்தர் தனது மகன் நமாலை அழைத்து, ஸ்ரீரங்காவை நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளார். நோர்வே நாட்டுக்கு அவரைச் செல்லுமாறும், இலங்கையில் ஸ்ரீரங்கா இருந்தால் அவரை நிச்சயம் "டக்ளஸ்" கொன்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

உடனே நமால் ராஜபக்ஷ தனது நண்பரான ஸ்ரீரங்காவை அழைத்து, இதனை தெரிவித்துள்ளார். மேற்படி தனக்கு ஏதாவது நடக்கலாம் என்று அஞ்சிய ஸ்ரீரங்கா அன்றைய தினம் அமெரிக்க தூரை சந்தித்து தனக்கு நடந்ததை விபரித்துள்ளார். அமெரிக்க காரியாலயம் சும்மா இருக்குமா ? அவர்கள் பாதுகாப்பான கேபிள் ஊடாக இத் தகவலை தமது தலைமைக்கு அனுப்பியவேளை விக்கி லீக்ஸ் இதனை ஊடறுத்துள்ளது. தற்போது இத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே மகிந்தருக்காக பல கொலைகளை டக்ளஸ் செய்துள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்தர் தனது வாயால் டக்ளஸ் கொலைசெய்து விடுவார் என்று கூறியுள்ளார். இச் செய்தியானது ஆங்கில இணையயங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விக்கி லீக்ஸ் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவையே. இருப்பினும் இதனை ஒரு ஆதாரமாக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முடியாது என்பது, பெரும் வருத்தத்திற்குரிய விடையம் ஆகும். 

« PREV
NEXT »

No comments