Latest News

September 19, 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி- விரைவில்ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ??
by Unknown - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலருடன் பதுமன் அண்மையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாக கூறப்படுகிறது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்தால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக உழைக்கப்பதாக பதுமன் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். அமல் ரணராஜா, பதுமனை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்தார்.
2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலத்தில் திருகோணமலை- பாலம்பட்டாறு பிரதேசத்திற்கு பொறுப்பான புலிகளின் தளபதியாக இருந்த போது இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவத்தினரை கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு 1979 இலக்கம் 48 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதுமனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியே நீதிபதி பதுமனை விடுதலை செய்தார்.
அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகிய போது பதுமன், கருணாவுக்கு ஆதரவாக இருந்தார் எனவும் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாக அவர், புலிகளின் தலைவரினால் வன்னிக்கு அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட போரின் பின்னர் 2009 ஆண்டு மே மாதம் பொதுமக்களுடன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பதுமன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
« PREV
NEXT »

No comments