ரஜினியின் கோச்சடையான் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீபாவளி அன்று வெளியீடு செய்ய திட்டமிட்டு இருப்பதால் டப்பிங் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது ரஜினி, கோச்சடையான் தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கோச்சடையான் தெலுங்கு படத்திற்கு விக்ரமசிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் கோச்சடையான் படத்தை வெளியிட சவுந்தர்யா திட்டமிட்டிருக்கிறார்.
No comments
Post a Comment