Latest News

September 23, 2013

கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதிக்கு..! மற்றது பெண்ணொருவருக்கு..!
by admin - 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மக்கள் நல்லாட்சிக்கான இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கப்படவுள்ளது.
மற்றைய ஆசனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை போனஸ் ஆசனத்தை தனக்கு வழங்குமாறு ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தூது அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் ஆனந்தசங்கரிக்கு ஆசனத்தை வழங்குவது தொடர்பான பேச்சிற்கு கடும் எதிர்ப்பு ஏனைய கட்சியின் உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
« PREV
NEXT »

No comments