Latest News

September 29, 2013

வட மாகாணசபைக்கான நிதி உரியவாறு ஒதுக்கப்படுமா? மஹிந்தவிடம் நேரில் கேட்டார் பான் கீ மூன்!
by Unknown - 0

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வினவியுள்ளார் என்று அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ உள்ளிட்ட அரச தூதுக்குழுவினருடன், கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே பான் கீ மூன் மேற் கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. செயலாளரின் கேள்விக் குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, போர் முடி வடைந்த 4 வருட காலப்பகுதிக்குள் வட மாகாண அபிவிருத் திக்காக 300 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

இதற்கமைய எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.

இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் தான், அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தாகவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம், ஜனாதிபதி ராஜபக்ஷ­ தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments