ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அதன் ஸ்தாபக தலைவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் பலம் கிடைத்ததாகவும் அதனை சிலர் தற்போது மறந்து விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்தியவர் பண்டாரநாயக்க. அவர் அந்த நோக்கங்களை எங்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.
சுதந்திரக்கட்சிக்குள் பல தரப்பினரின் கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன. பண்டாரநாயக்கவின் கொள்கைகள் மறக்கப்பட்டுள்ளன என்றார்.
No comments
Post a Comment