ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்து நாட்டில் இருந்து வெளியேறும் போது வெளியிட்ட கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியும் கியூபா தூதுவருமான தமரா குணநாயகம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளை இலங்கையின் பௌதீக அபிவிருத்தி பற்றி அவதானிக்க வரவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கவே வந்தார்.
போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது. மனித உரிமை ஆணையாளர் இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வெளியிட்ட அபாய அறிவிப்பை உறுதிப்படுத்த ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை உதாரணமாக காட்டாலம்.
அரசாங்கம் மேலும் தாமதிக்காமல் தேசியப் பிரச்சினைக்கு காரணமான அரசியல் விடயங்கள் தொடர்பாக புரிந்து கொண்டு அதற்கான தீர்வை வழங்க வேண்டும். அரசாங்கத்தை உரிய வழிக்கு கொண்டு வரும் கடமை மக்களுக்கும் உள்ளது. மக்கள் இவ்வாறு தமது சுதந்திரத்திற்காக குரல் கொடுக்காது போனால் நாடு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என்றார்.
No comments
Post a Comment