Latest News

September 22, 2013

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்வார்.???
by Unknown - 0

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்வது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்வார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷித் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மன்மோகன் சிங், கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதற்கு பதிலாக இரண்டாம் நிலை பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் டெல்லி சென்றிருந்த போது, மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது பற்றிய எந்தக் கருத்துக்களையும் இந்திய பிரதமர் அப்போது வெளியிடவில்லை.

இந்த நிலையில் அவர் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
« PREV
NEXT »

No comments