வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் மூவரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு இச் சிறுமி நடந்து சென்ற சமயம் வேன் ஒன்றில் மூவர் கடத்திச் சென்றதாக சிறுமியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதியொன்றில் அவரை விட்டுச்சென்றுள்ளனர்.
இதனை கேள்வியுற்ற பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.
No comments
Post a Comment