Latest News

September 24, 2013

இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தியமைக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்
by Unknown - 0

இலங்கையில் இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மூன்று மாகாணங்களுக்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் (Alistair Burt ) பாராட்டு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் அதிகளவில் வாக்குகளை பயன்படுத்தியமை அவர்களின் ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடும் விருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மூன்று மாகாணங்களிலும் பெரும்பாலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றதுடன் அதிகளவான வாக்குகள் பதிவானதாக உள்நாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் விபரித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கமும், மாகாண சபையில் ஆசனங்களை வென்ற கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இலங்கையின் மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க இரண்டு தரப்புக்கும் அழைப்பு விடுகின்றோம்.
நீடித்த நல்லிணக்கம் தேவை என்ற செய்தியை இந்த தேர்தல் அனைத்து இலங்கையர்களுக்கும் வழங்கியுள்ளது.
ஆனால் இலங்கையின் சகல பிரஜைகளின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை அங்கீகரிக்கும் முக்கியமான முதல் படியாக இந்த தேர்தல் இருக்கும்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை வரவேற்கின்றோம்.
எனினும் அரச வளங்கள் தேர்தல் பிரசாரத்தில் தவறாக பயன்படுத்ப்பட்டமை, வாக்காளர்கள் அச்சுறுத்திய சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்திள்ளன.
இந்த தீவிர குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments