Latest News

September 14, 2013

அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் – அமெரிக்கா எச்சரிக்கை
by Unknown - 0

பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா உள்ளக செயல்முறைகளின் மூலம் பதிலளிக்கத் தவறினால், அனைத்துலக செயல்முறைகளை நோக்கிய அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளநிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்றோபேட் பிளேக்கிற்குப் பதிலாக இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக் குழுவின் முன்பாக நியமன உறுதிப்படுத்தல் விசாரணையின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பேரழிவுமிக்க போருக்குப் பின்னர் சிறிலங்கா தனது சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப பணியாற்றுகிறதுஎனது நியமனத்தை உறுதிப்படுத்தினால், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்துவேன்.
எல்லா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுப்பேன்அமெரிக்கா மிகவும் தீவிரமாகச் செயற்படுகிறது. சிறிலங்காவுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளதுபெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபான்மை சமூகத்துக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் கவலைகளுடன் நாம் இணைந்திருக்கிறோம்.
உள்ளக செயல்முறைகளின் மூலம் சிறிலங்கா பதிலளிக்கத் தவறினால், அந்த விவகாரங்களுக்கு அனைத்துலக செயல்முறைகளின் மூலம் பதிலளிக்கக் கோரும் அழைப்புகள் அதிகரிக்கும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையின போது, அமெரிக்க செனெட் உறுப்பினர், ஜோன் மக்கெய்ன், சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த போதிலும், மனிதஉரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், அங்கு நடந்து வரும் மோசமான மனிதஉரிமை மீறல்களை கண்டிப்பதில் அமெரிக்கா இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments