புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக உயர்நிலைப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்க அனுப்பிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தூண்டுகிறார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நல்ல வசதியாக வெளிநாடுகளில் நல்ல வருமானத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்ற போதிலும் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் கொள்கையையே கடைப்பிடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சுயநலப்போக்கைக் கடைப் பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்குள்ள தமிழர்கள் தமிழ்த் தாயகத்துக்காக ஆயுதப் போராட்டத்தில் இறங்கவேண்டுமெனத் தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றமென்றும் தெரிவித்தார்.
நல்லிணக்கப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், இது தமிழர்களுக்கு இலகுவான செயல் அல்ல என்றும், வடக்கிலுள்ள தமிழர்களில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் அமைதியாக வாழ்கிறார்கள் என்றும் அவர்களுக்கு நல்லிணக்கப்பாடு ஒரு பிரச்சினையல்ல என்றும் கூறினார்.
தமிழர்கள் மட்டுமல்ல நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரும் இந்நாட்டு மக்கள் ஒரே தேசத்து மக்களாக நல்லிணக்கப்பாட்டுடன் வாழ முடியும் என்பதை இப்போது எடுத்துக்காட்டியிருப்பதாகவும் கூறினார். இந்த பேட்டியின்போது பாதுகாப்புச் செயலாளருடன் சேர்ந்துகொண்ட கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரிவினைவாத எண்ணங்களை கைவிடவேண்டும் என்றும், அநாவசியமாக இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் அவர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

No comments
Post a Comment