Latest News

September 14, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - தஞ்சாவூர் நகரில்
by Unknown - 0

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் அற்புதமான அடையாளச் சின்னம் தற்போது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரில் தரமிக்க பல்கலைக் கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற சைவத்திரு ஆலயங்கள் ஆகியன சூழவுள்ள அழகிய சூழலில் நிர்மானிக்க்பபட்டு வருகின்றது.

உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனத்தின் தலைவரும் தமிழ் நாட்டின் உணர்வுள்ள தலைவர்களில் ஒருவருமான திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவொன்று அங்கு முழுநேரமாக பணியாற்றிய வண்ணம் அங்கு மேற்படி நினைவு வளாகத்தை அமைத்துவருகின்றது.

ஆரம்பத்தில் மேற்படி நிர்மானத்திற்கு துன்பங்களை அனுபவித்த ஈழத்தமிழ் அன்பர்களிடமிருந்து நிதி எதனையும் பெறக்கூடாது என்ற சிந்தனையோடு செயற்பட்ட மேற்படி குழு, தற்போது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தாமாக முன்வந்து வழங்கும் நிதியின் உதவியினால் அழகிய ஒரு அடையாளச் சின்னமாக அங்கு உருவாகி வருகின்றது.

மேற்படி நினைவு முற்றத்தை பார்த்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் முகமாக கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அவரது சென்னை நண்பர்களும் அங்கு சென்றனர். அப்போது திரு பழ நெடுமாறன் ஐயாவும் அவரது உதவியாளர்களும் மேற்படி முள்ளிவாய்க்கால் “நினைவு முற்றத்தை’ சுற்றிப் பார்க்கும் வகையில் எற்பாடுகளைச் செய்தார்கள். இந்த நினைவு முற்றத்தின் தோற்றத்தையும் அதன் புனிதத்தையும் கலைத்துவமும் கடின உழைப்பும் நிறைந்த பொருட்செலவும் மிக்க ஒரு “பொக்கிசத்தை” நமக்காகத் தரும் முயற்சிகளில் உழைத்து வரும் ஐயா பழ.நெடுமாறன் தலைமையிலான குழுவினரை உலகத் தமிழினம் வணங்க வேண்டும். போற்றவேண்டும்.

இங்கு அமைந்துள்ள பல நினைவுச் சின்னங்கள் மற்றும் எம்மால் எண்ணிப்பார்க்க முடியாத கலைச் சிற்பங்கள், மற்றும் முள்ளிவாய்க்காலிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட மண், உதிரம் கலந்த சகதியாக 2009ம் ஆண்டு மே மாதத்தில் காணப்பட்ட அந்த இடத்தின் களி உருண்டைகள் அத்துடன் தலைவர் பிரபாகரன் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி ஆகியன பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பு மிக்க அறை ஆகியவற்றைக் கொண்ட ஒரு அழியாத சின்னமாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திகழப்போகின்றது.

மேலும் அங்கு முள்ளிவாய்க்கால் போரில் அநியாயமாகக் கொல்ல்பபட்ட பாலச்சந்திரன் போன்ற செல்வங்களின் படங்கள் மற்றும் வீர மரணமடைந்த போராளிகள், தளபதிகள் மற்றும் முன்னணி செயற்பாட்டாளர்கள் ஆகியோரது படங்களும் காணப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற கண்காட்சி மண்டபத்தில் தந்தை செல்வாவி ன் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

ஆழகிய ஒரு நிலப்பரப்பில் அமைந்து வரும் இந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இவ்வருட இறுதிக்குள் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையிலான குழு விளக்கமளித்தது. மேற்படி சந்திப்பின் போது திரு பழ. நெடுமாறன் அவர்களிடம் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம். கதிரோட்டங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள “இதுவரை” என்னும் நூலின் பிரதியொன்றையும் கையளித்து சென்னையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்படி நூலின் வெளியீட்டு விழாவில் பேச்சாளராக கலந்து கொள்ளும் படியும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இங்கே காணப்படும் படங்கள் தஞ்சாவூரின் முள்ளிவாய்க்கால் முற்றம் வளாகத்தில் எடுக்கப்பட்டவையாகும்.tanjure_002


tanjure_003tanjure_004

tanjure_005tanjure_006
« PREV
NEXT »

No comments