Latest News

September 22, 2013

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு.....
by Unknown - 0

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.

கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது. இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

« PREV
NEXT »

No comments