Latest News

September 28, 2013

இலங்கைக்கு வர பயப்படும் சுற்றுலா பயணிகள்!!
by Unknown - 0

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவுகள் அதிகம் என புதிய மதிப்பீட்டு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகமான செலவு கொண்ட இடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்த நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான 45 வீதம் அதிகமாகும்.

விடுமுறை விடுதிகளுக்கான கட்டணம் குறைவாக உள்ள இடங்களில் இந்தோனேசியாவின் பாலி தீவு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா உள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் சூரிய கிரீம், கிருமிநாசனி மற்றும் மூன்று வேளை உணவு மற்றும் வைன் போன்றவற்றுக்காக மாத்திரம் 54.45 பவுண்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கப் கோபி சராசரி விலை 26 பென்ஸ், பாலி தீவுடன் ஒப்பிடும் போது இலங்கையில் செலவுகள் 24 வீதம் அதிகமாகும் மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாம், நான்காம் இடங்களில் வியட்நாம், தாய்லாந்து நாடுகள் உள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments