Latest News

September 29, 2013

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக் கூடாது - மன்னிப்புச் சபை
by Unknown - 0

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத காரணத்தினால் அங்கு  பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மேலும் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடத்தப்படுவதனை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை விவகாரத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து, பொதுநலவாய நாடுகள் அமைப்பு வெட்கப்படக்கூடிய வகையில் மௌனம் காத்து வருவதாகவும் அவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

« PREV
NEXT »

No comments