இலங்கை பொறுப்புக் கூறும் விடயங்கள் தொடர்பில் தனது சொந்த உள்ளக பொறிமுறை வழியாக உரிய செயற்பாடுகளை முன்னெடுக்காது போனால் சர்வதேச செயல்முறைகளை நோக்கிய அழுத்தங்கள் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிஷா தேசாய் மிஸ்வால், அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழு முன் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பேரழிவையை ஏற்படுத்திய உள்நாட்டு போருக்கு பின்னர் சமூகத்தில் மீள் கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிண்ககத்தை ஏற்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான தனது பொறுப்புக் கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அங்கு உரையாற்றிய செனட் உறுப்பினர் மர்க்கோ என்டோனியோ, இலங்கையில் 30 தேவாலயங்கள் பௌத்த தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இலங்கையில் அப்படியான சம்பவங்கள் நடந்ததா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அங்கு கருத்து வெளியிட்ட செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயின்,
இலங்கையில் நடந்த மோதல்கள் பெரும் இரத்தக்களரியை நோக்கி சென்றன, ஆனால் அங்கு தொடர்ந்தும் "தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள்" இடம்பெறுவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலைமை அதிகரிக்குமானால் மீண்டும் ஒரு குழப்பமான நிலைமை அங்கு உருவாகும்.
இதனால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவின் கண்டனங்கள் இதனை விட அழுத்தமானதாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
No comments
Post a Comment