Latest News

September 13, 2013

பொதுநலவாய மாநட்டில் உறுப்பு நாடுகள் கலந்து கொள்ளக் கூடாது- மனித உரிமை கண்காணிப்பகம்
by Unknown - 0

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி  மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் பொதுநலவாய உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுநலவாய அமையத்திலுள்ள 54 உறுப்பு நாடுகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பிவைத்துள்ளது.இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ள அரசாங்கங்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கீழ்மட்ட பிரதிநிதிகளை அனுப்பவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி கூறியதை தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்பது இலங்கை அரசாங்கத்திற்கும் நீதிகோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தவறான செய்தியை வழங்குவதாகும்’ என்று மனித உரிமைகள் கண்காணிபகத்தின் ஆசிய பணியாளர் பிறாட் அடம்ஸ் கூறினார்.

இலங்கையில் பொதுநலவாய உச்சி மாநாடு நடத்தப்படுவது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் என்பவற்றை முன்னெடுக்கும் பொதுநலவாயத்தின் கடப்பாட்டின் மீது மிகுந்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது என்றும் அடம்ஸ் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்காக நடக்கும் பிரச்சாரத்தில் பங்குப்பற்றுதலுக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் வீட்டிலிருக்கவேண்டும் எனவும் அதன் அடக்குமுறை கொள்கை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பகிரங்கமாக இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென்றும் அடம்ஸ் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments