Latest News

September 29, 2013

ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்?
by Unknown - 0

வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக தெரிவுசெய் ­யப்­பட்­டுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­து­கொள்ள வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஏலவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­மா­காண ஆளுநர் முன்­னி­லையில் புதிய முத­ல­மைச்சர் சத்­தியப் பிர­மாணம் செய்­து­கொள்ள மாட்டார் என்று தெரி­வித்­தி­ருந்­தது. அவ்­வாறு அவர் சத்­தியப் பிர­மாணம் செய்து கொள்­ளாத பட்­சத்தில் ஜனா­தி­பதி முன்­னி­லை­யிலோ அல்­லது கட்சித் தலைவர் முன்­னி­லை­யிலோ சத்­தியப் பிர­மாணம் செய்து கொள்­ளலாம் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை, நியூ­யோர்க்­கி­லுள்ள ஐ.நா. சபையில் உரை­யாற்றச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாளை திங்கட் கிழமை நாடு திரும்­புவார் என எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி நாடு திரும்­பி­யதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மை ப்பு இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை புதிய அமைச்­ச­ர­வையை அமைப்பது தொடர்பிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாளை மீண்டும் கூடி ஆராயவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன.

« PREV
NEXT »

No comments