Latest News

September 29, 2013

வட மாகாணத்துக்கான அதிகாரங்களை அரசு வழங்காவிடின் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் - எம்.ரி.ஹஸன் அலி
by Unknown - 0


வட மாகா­ணத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அபார வெற்­றியைப் பெற்­றுள்ள நிலை யில் வட பிராந்­தி­யத்­துக்கு உரித்­தான ஆட்சி அதி­கா­ரங்­களை அர­சாங்கம் வழங்­கா­விடின் சர்­வ தேச ரீதி­யாக இலங்கை பாரிய சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் நாய­கமும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ரி.ஹஸன் அலி எச்­ச­ரித்­துள்ளார்.

அது மட்­டு­மன்றி, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனீவா மனித உரி­மை கள் பேரவை அமர்­விலும் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் பிரே­ர­ணை­க­ளையும் இலங்கை அரசு எதிர்­நோக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரி­வித்­ துள்ளார். இது தொடர்பில் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு கருத்துத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் ஆயுத அடக்கு முறைக்குள் வாழ்ந்து அவர்­களின் விருப்பம் போல் செயற்­பட்­டார்கள் எனக் கூறுவோர் இன்­றைய யாதார்த்த நிலை­மை­க­ளையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று புலிகள் இல்லை. அப்­படி இருந்தும் அவர்கள் தங்­களைத் தாங்­களே ஆளக் கூடி­ய­தான ஒரு கட்­ட­மைப்­பி­னையே இன்றும் வேண்டி நிற்­கின்­றனர். இதனை அவர்கள் தங்­க­ளது ஜன­நா­யக ரீதி­யி­லான வாக்குப் பலத்தின் ஊடாக சர்­வ­தே­சத்­துக்கு வெளிக்­காட்டி விட்­டனர். தங்­க­ளது பிராந்­தி­யத்­துக்கு பிராந்­திய ரீதி­யி­லான அதி­காரம் தேவை என்­பதில் தமிழ் மக்கள் உறு­தி­யாக உள்­ளனர் என்­பது தெளி­வான அவர்­க­ளது ஆணை மூலம் வெளிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ஆகவே, இவற்­றினை எல்லாம் இலங்கை அர­சாங்கம் புரிந்து கொண்டு சட்ட ரீதி­யான அதி­கா­ரங்­களை வட­மா­காண சபைக்கு வழங்கு­வ­துடன் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட வேண்டும். இதனை விட இனி எந்த வழியும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் முஸ்­லிம்­க­ளையும் ஏமாற்ற நினைப்­பது போன்று தமி­ழர்­களை இனியும் அர­சாங்கம் ஏமாற்ற முடி­யாது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் என்­பது மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அது இன்று சர்­வ­தேச ரீதி­யாகப் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தமிழ் மக்கள் இன்று அதிகப்படியான ஆணையை வழங்கி விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments