Latest News

September 26, 2013

சுற்றுலாப்பிரயாணி சடலமாக மீட்பு - நாரம்மலையில் சம்பவம்
by Unknown - 0


ஜப்பானில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவரின் சடலம் நாரம்மலை பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா வந்த டோமோ டொக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாரம்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டுபிடிக்க சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இறந்தவரும் அவரது குழுவினரும் வேன் ஒன்றில் குருநாகலையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.


இச் சந்தர்ப்பத்தில் தாகசாந்திக்காக நாரம்மலை நகருக்கு சமீபமாக உள்ள தென்னந்தோட்டம் ஒன்றின் அருகே வாகனம் நிறுத்தப்பட்ட போது பிரஸ்தாப நபர் வேனிலிருந்து இறங்கி தோட்டம் நடுவே ஓடிச்சென்றதாக தெரிய வருகின்றது.

எனினும், இவ்வாறு ஓடியவர் திரும்பி வராததையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில மணித்தியால தேடுதலின் பின்னர் இவரது சடலத்தை நாரம்மலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சடலம் மரண விசாரணைக்கென குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

« PREV
NEXT »

No comments