Latest News

September 26, 2013

இலங்கைத்தீவில் விரிந்தது நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின் ‘தலைவாசல்’ - புதிய தந்திரோபாய தொடர்பாடல் களம் !
by Unknown - 0

சிறிலங்கா அரசுக்கு சவால் விடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் “தலைவாசல்” எனும் உருவற்ற தொடர்பாடுடல்வாயில் (Virtual Portal)ஒன்றினை இலங்கைத்தீவினை மையமாக கொண்டு ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்றேல் போன்ற நாடுகள், தங்களுடனான நட்புறவுக்கு வெளியற்ற நாடுகளை இலக்காக கொண்டு, அந்ததந்த  நாடுகளின் குடிமக்களுடனான தொடர்பாடலை விரித்தி செய்யும் வகையில் , சமீபத்தில் தொடங்கியுள்ளம்  ‘நிழல் தூதரகங்கள்’ வரிசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்துள்ளது.

21ம் நூற்றாண்டின் தொடர்பாடல் துறையின் நவீன தொழில்நுட்பங்களின் எழுச்சி, உலக அரசியல் ஒழுங்கில் புதிய தந்திரோபாயங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்து வருகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா அரசுக்கு சவால்விடும் வகையில், இலங்கைத்தீவில் விரிந்துள்ள தலைவாசல் வழியே, புலம்பெயர் தமிழர் குழாமானது, இலங்கைத் தீவின் தமிழீழத் தாயக உறவுகளுடன் நெருங்கிய தொடர்பாடலுக்கு வழியேற்படுத்துகின்றதென நாடுடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவாசல் வழியே கருத்துப் பரிமாறும் கருவியாக ‘ருவிட்டர்’(twitter) சமூக தொடர்பாடல் முறைமை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, “Welcome 2 Thalaivaasal – Market place of ideas – let’s talk & beat the 6th Amendment – Rudra” எனும் முதல் ருவிட்டர் செய்தியினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தொடர விட்டுள்ளார்.

இந்த’டுவிட்ரர்’ கணக்கின் (twitter account) குறியீட்டு முகவரியாக@TGTETamilEelam இது இருக்குமெனத் தெரிவிக்கப்பட்ள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள  ஊடற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சனநாயக அணுகுமுறையின் புதிய உபாயமாக விளங்கும் தலைவாசல், முதல் கட்டத்தில் தமிழீழத் தாயக உறவுகளுடன் தொடர்பாடல்களை ஆரம்பித்துச் செயற்பட்டு, பின்னர் நாடுகடந்த நிலையில் அனைத்துலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர் சமூகத்துடனும் உரையாடவழி சமைக்கும்.

நவீனதொழில் நுட்பங்களையும் அதன் சாதனங்களையும் பயன்படுத்தி, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள புதிய ஊடகக் கருவிகளையும் பாவித்து நா.தமிழீழ அரசாங்கமானது, இதன்வழியே தனது கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் விரிவாக்கம் செய்யமுடியும்.

அதுமட்டுமன்றி எமது சமூகத்துடன் நேரடியான தொடர்புகள் மூலம், ஆக்கபூர்வமான கருத்துக்களை அவ்வப்போதே எமது மக்களிடமிருந்து பெற்றுக்  கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

இந்த முன்னெடுப்பின் மூலம் தமிழீழ மக்களோடும் மற்றும் அனைத்துலக சமூகத்தோடும் நேரடியான பரிவர்த்தனையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அண்மைக் காலங்களில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஈரானிலும் சிரியாவிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள ‘நிழல் தூதரகங்கள்’ இந்த முயற்சி தொடர்பாக எமக்கு பலத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றன.

அதேபோன்று, இஸ்ரேலும் தனது அண்டை நாடுகளான சவூதிஅரேபியா, கட்டார், ஐக்கியஅரபு இராச்சியம், ஓமான், குவைத், பஹ்றேன் ஆகிய நாடுகளில் இந்தசேவையை ஆரம்பித்துள்ளமை அங்குள்ள மக்களோடு நேரடியான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காகவே.

இலங்கைத் தீவில் வாழும் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை நேரடியாக எடுத்துக் கூறுவதும் சனநாயகப் பாங்கினைப் நவீன் ஊடகதொடர்பாடல் முறைவழியினை உபாயமாக்குவது என்பதும் எமது இலக்குகளில் ஒன்றாகும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரின் ‘தலைவாசல்’ எனப் பெயர் கொண்டிருப்பது முன்னொருகாலம் மாதிரி இவ்வாயில் வழியே பொதுவானதொரு வெளியில் நாம் சந்தித்து, ஒருவரையொருவர் வாழ்த்தி, கருத்துக்களைப் பரிமாறும் களமாக ‘தலைவாசல்’ விளங்கும் என்ற எமது நோக்கத்தின்,ஆவலின் வெளிப்பாடாகவே.

இவ்வாசல் வழியே கருத்துப் பரிமாறும் கருவியாக ‘ருவிட்டர்’ சமூக தொடர்பாடல் முறைமை பயன்படுத்தப்படும்.

மேலும், எமது மதிப்புக்குரிய பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் இந்தக் கருத்துப் பரிவர்த்தனையில் அவ்வப்போது தமிழீழ மக்களோடு நேரடியாகக் கலந்துகொள்ளுவார்.

இந்த’டுவிட்ரர்’கணக்கின் (twitter account) குறியீடுவருமாறு:@TGTETamilEelam

இந்த ‘தலைவாசல்’ வழியே இணைந்து எமது முன்னெடுப்புக்கு ஊக்கம் அளிக்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம். இந்த நவீனதொழில் நுட்பக் கருவியைப் பயன்படுத்திசெய்திப் பரிமாற்றத்தை அதிகரிப்பதோடு, ஆக்கபூர்வமானதும் வெளிப்படையானதுமாகிய கருத்துக்களைப்பரிமாறி, எமது ஒன்றுபட்ட இலட்சியமான சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவாசல் எனும் தொடர்பிலான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments