Latest News

September 16, 2013

இராணுவத்தில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல்!
by Unknown - 0

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை இராணுவத்தில் இணையுமாறு அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் இயங்கும் துணை இராணுவ குழுக்களாக கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களை இதற்காக இராணுவு புலனாய்வு தரப்பினர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகள் இராணுவத்தில் இணையாவிட்டால், அவர்களின் பெற்றோரை கொலை செய்வதாகவும் மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இராணுவ புலனாய்வுத் தரப்பினர், வாகரை, வெல்லாவெளி, குடும்பிமலை மற்றும் வேப்பாவெட்டுவான் போன்ற பகுதிகளில் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தி வருகின்றனர்.
முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments