Latest News

September 16, 2013

போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எமக்கு வேண்டும் - சம்பந்தன்
by Unknown - 0

நாம் ஒரு­மித்த நாட்­டிற்குள், பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்குள் அடி­மை­யாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிர­தே­சத்தில் கௌர­வத்­து­டனும் சுய மரி­யா­தை­யுடன் பாது­காப்­பா­கவும் வாழ்­வ­தற்கு போதி­ய­ளவு அதி­கா­ரங்­களும் சுயாட்­சியும் எங்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்றே கோரி நிற்­கின்றோம்.

இத­னையே தேர்தல்விஞ்­ஞா­ப­னத்­திலும் தெரி­வித்­துள்ளோம் எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை ஜனா­தி­ப­தியும் தென்­னி­லங்­கையின் பேரி­ன­வாத சக்­தி­களும் நன்கு விளங்கிப் படிக்க வேண்டும். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தென்­ப­குதி மக்கள் மத்­தியில் தவ­றாக விமர்­சிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் யாழ்.அலு­வ­ல­கத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

ஒன்­று­பட்ட நாட்­டிற்குள் உண்­மை­யான, உறு­தி­யான, விசு­வா­ச­மான, போது­மான அள­வுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்­வதன் மூல­மாக இனப்­பி­ரச்­சினை தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்ற கருத்­தையே நாங்கள் வெளிக்­கொ­ணர்ந்­துள்ளோம்.

எமது தற்­போ­தைய நிலைப்­பாடு தொடர்­பா­கவும் எமது அர­சியல் நோக்கம் என்ன என்­ப­தையும் தெளி­வாகக் கூறி­யுள்ளோம். எதிர்­வரும் காலத்தில் இதை அடை­வ­தற்கு என்­ன­வி­த­மாக செயற்­ப­ட­வுள்ளோம், எவ்­வி­த­மாக அடை­யலாம் என்றும் கூறி­யுள்ளோம். இத­னையும் ஒரு­மித்த நாட்­டிற்குள் ஒற்­று­மை­யாக ஒரு­தீர்வு காணப்­பட வேண்டும் என்றே தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம்.

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் கேட்­ட­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கேட்­ப­தாக ஜனா­தி­ப­தியும் தென்­னி­லங்­கையில் உள்ள சில தீவிர சக்­தியினரும் தவ­றாக கூறி­வ­ரு­கின்­றனர். இதனைக் கூறு­ப­வர்கள் எமது விஞ்­ஞா­­ப­னத்தை தெளி­வாக வாசிக்க வேண்டும். தமி­ழீழ விடு­தலைப் புலிகள் எதைக் கேட்­டார்கள் என்­பதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதைக் கேட்­கின்றோம் எனவும் இவர்கள் சொல்­ல­வில்லை. ஆனால் ஒரு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் இவர்­க­ளு­டைய கருத்து அமைந்­துள்­ளது.


சர்வதேச பங்களிப்புடனே தீர்வு என்பதை கூறியுள்ளோம். இவ்விதமான தீர்வு ஒருமித்த நாட்டிற்குள் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விசேடமாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

« PREV
NEXT »

No comments