Latest News

September 24, 2013

அகதிகள் தொடர்பில் இனிமேல் தகவல் வழங்கப் போவதில்லை! அவுஸ்திரேலிய அரசாங்கம்
by admin - 0

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப் போவதில்லை என்று அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின், விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால், படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தேவையேற்படும் போது மாத்திரமே சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவிருப்பதாக மொரிசன் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த 12 மாதங்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு 400 படகுகளில் 45 ஆயிரம் பேர் சென்றுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
« PREV
NEXT »

No comments