Latest News

September 24, 2013

அக்கராயனில் ஆணின் சடலம் மீட்பு
by admin - 0

அக்கராயன் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றின் சாமி அறையிலிருந்தே இவரது சடலம்  இன்று செவ்வாய் மாலை மீட்டதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொலிஸ் பிரிவிலுள்ள வன்னேரிக்குளம்- குஞ்சுக்குளம் கிராம வாசியான அறுபது வயதுடைய முருகேசு திருநாவுக்கரசு என்பவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் மனைவியையும் தனது ஐந்து பிள்ளைகளையும் பிரிந்து தனிமையில் வாழ்ந்தவரென்றும் வாய் பேச முடியாதவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அக்கராயன் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments