Latest News

September 15, 2013

முல்லைத்தீவில் 'கோட்டாபய' கடற்படைத்தளம்
by admin - 0

முல்லைத்தீவில், இலங்கை கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடற்படையின் இந்த தளத்திற்கு 'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' தளம் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த புதிய தளத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவில், இலங்கை கடற்படை 2011 ஜனவரி 13 ஆம் திகதி  முகாம் ஒன்றை நிறுவியது. தற்போது,
செம்மலை, நாயாறு, சிலாவத்தை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களுக்குப் பொறுப்பான தளமாக,
'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' நிறுவப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments