Latest News

September 10, 2013

அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார் அனந்தி!
by admin - 0

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம், கொக்குவில் ஆகிய பகுதிகளில் பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்து கொண்டு சுழிபுரம்-வழக்கம்பரையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது யாழ். நகரத்தை அண்டியுள்ள ஐந்துசந்தி பகுதியில், 9.45மணியளவில் இராணுவ வாகனம் ஒன்று பின்தொடர்ந்து வந்துள்ளது. அந்த வாகனம் அனந்தி பயணித்த வாகனத்தை கடந்துசென்ற சில நிமிடங்களில் திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரிய கற்களை அனந்தியின் இருக்கையை நோக்கி வீசியுள்ளது. எனினும் அவர் சுதாகரித்துக் கொண்ட நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார்.

தாக்குதலின் பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்ற நிலையில் அனந்தி பாதுகாப்பாக வீடு சென்றுள்ளார்.

எனினும் கற்கள் வீசப்பட்டத்தில் வாகனம் சிறிய சேதத்திற்குள்ளாகியிருக்கின்றது. முன்னதாக சுன்னாகம் வழியாக வந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது.

அதனால் வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசலினால் அனந்தியின் வாகனம் மிக மெதுவாக பயணித்துள்ளது. இதன்போது வாகனத்தின் ஐன்னல் பக்கம் அமர்ந்திருந்த அவர் அவதானிக்கப்பட்டு அங்கிருந்து பின்தொடரப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. காரணம் அவர் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி சகல கற்களும் வீசப்பட்டுள்ளமை; இங்கு குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments