Latest News

September 10, 2013

ஐ.நாவின் 24ம் மனித உரிமைக் கூட்டத்தொடரில் BTF
by admin - 0

தமிழ் மக்கள் மத்தியில் சில எதிர்பார்ப்புக்களோடு நோக்கப்படும், ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 24ம் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியத் தமிழர் பேரவையின் மனித உரிமைக்கான குழுவொன்று ஜெனீவாவுக்கு நேற்றைய தினம் சென்றடைந்துள்ளது. கனடியன் தமிழ் காங்கிரஸ் (CTC ), ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த தமிழ் அரசியல் நடவடிக்கை மன்றம் (USTPAC) ஆகிய தோழமை அமைப்புகளோடு இணைந்து பிரித்தானியத் தமிழ் பேரவையானது பல அரசியல் நுண் நகர்வுகளை செயற்படுத்தி வருகிறது. எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறவிருக்கும் இக் கூட்டத்தொடரில், அண்மையில் இலங்கை சென்று வந்துள்ள மனித உரிமை ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் நவிப் பிள்ளை அவர்கள் வாய் மூல அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளார். 

அதில், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும், அவர்களுக்கெதிராக இடம் பெற்ற மனித உரிமை மீறல்களையும் பற்றிய பதிவுகள் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை நிராகரித்து வரும் இலங்கையரசு அதே சமயம் புனர்வாழ்வு, புனரமைப்பு. புனநிர்மானம். அபிவிருத்தி போன்றவற்றை தான் சிறப்பாக முன்னெடுப்பதாக சர்வதேச சமூகத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக பிரச்சாராம் செய்து வருகிறது. இலங்கையரசின் போலியான பிரச்சாரங்களை நம்பி இலங்கைக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு பல நாடுகள் தீர்மானிக்கக் கூடிய ஆபத்தான இவ்வேளையில், பிரித்தானியத் தமிழர் பேரவை, இப்பரப்புரைகளிளிருக்கும் பொய்மையை ஆதரபூர்வமாக சர்வதேசதிற்கு நீருபிக்க தொடர்ந்து போராடி வருகிறது.

நீண்ட கள ஆய்வுகள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாய் வைத்து Reconciliation in Srilanka (இலங்கையில் இணக்கப்பாடு) என்ற சிறிய கையேடு ஒன்றை பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியுட்டுள்ளது. இது அங்கு வரும் ராஜதந்திரிகள், உயர் மட்ட அரசதிகாரிகள் ஆகியோருக்கு விநியோகிக்கப்படுவதுடன், அவர்களுடன் விவாதத்திற்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பேரழிவு நடந்து நான்கு வருடம் கடந்த பின்பும், ஒட்டுமொத்தமான ஒரு தேவை மதிப்பீடு (Needs Assessment) செய்யப்படவில்லை. எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை விதவைகள் உருவாக்கப்பட்டார்கள்? எத்தனை குழந்தைகள் அனாதைகலாயினர்? வீடுகளுக்கு, பாடசாலைகளுக்கு மற்றும் பொது இடங்களுக்கான சேத விபரம் என்ன? போன்ற எந்த விபரத்தையும் இலங்கையரசு பகிரங்கமாக வெளியிடவில்லை. இருப்பினும் தமிழர்கள் பெயரில் சர்வதேசத்திடமிருந்து பல ஆயிரம் கோடிகளை பெற்றுக் கொள்கிறது. 

சேத விபரமே இல்லாமால் எப்படி மீள் கட்டமைப்பு செய்ய முடியும் என்ற கேள்வியை முன்வைப்பதுடன் , இலங்கையரசு தொடர்ந்து நாடத்தும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பை அம்பலப் படுத்தும் இவ்நூல் எமக்கு ஒரு வலிமையான ஆவணமாகும். அதேசமயம் விபரம் புரியாமலிருக்கும் சர்வதேசதிட்கும் எமது இன்றைய பிரச்சனைகளை தெளிவு படுத்த உதவுகிறது, மனிதஉரிமை கூட்டத்தொடரில் பங்கேற்கும் ராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் இக்கையேடு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் இங்குள்ள பொது நல அமைப்புக்களுக்கும், உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுபினர்களுக்கும், பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு, விநியோகிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

« PREV
NEXT »

No comments